ஓடையில் கழிவுகள் கொட்டிய டிராக்டர் சிறை பிடிப்பு

Update: 2022-12-01 13:58 GMT


வீரபாண்டி பகுதியில் உள்ள ஓடையில் கட்டிட கழிவுகளை கொட்டி வந்த டிராக்டரை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கட்டிட கழிவு

திருப்பூர் மாநகரத்தில் நீர் நிலை ஓடைகளான ஜம்மனைபள்ளம், சங்கிலிப் பள்ளம், சபரிபள்ளம் ஆகிய முக்கியமான நீரோடைகள் உள்ளன. இதில் பொங்கலூர், அவரபாளையம், காளிநாதன்பாளையம், அல்லாலபுரம் ஆகிய குட்டைகளில் இருந்து மழை நீர் நிரம்பி நீரோடையாக பெருக்கெடுத்து வரும். இந்த தண்ணீர் வீரபாண்டி முத்தையன் கோவில், தாராபுரம் ரோடு, சத்தியா காலனி வழியாக சங்கிலிப் பள்ளத்தின் கலந்து நொய்யல் ஆற்றில் சென்றடைகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

இந்த நீரோடையில் கட்டிட கழிவுகளை கொட்டி வந்தனர். இந்த நிலையில் கட்டிட கழிவுகளை ெகாட்டி வந்த டிராக்டரை 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்து டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

இது குறித்து கவுன்சிலர் அருணாச்சலம் கூறும்போது "நொய்யல் நதியின் கிளை நதியாக இருந்து வரும் வீரபாண்டி ஓடையானது 300 அடி அகலம் கொண்டதாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக ஓடைகளில் குப்பைகளும், பழைய வீட்டு கட்டுமான கழிவுகளும், இறைச்சி மற்றும் பனியன் கழிவுகளை ஓடைகளில் கொட்டி வருகின்றனர். இதனால் 300 அடி அகலம் இருந்த ஓடையானது 30 அடியில் சுருங்கி முற்றிலுமாக காணாமல் போயுள்ளது.

கடந்த 2 நாட்களாக ஓடையில் கட்டிடக் கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். அதிகாரிகள் உதவியுடன் இது போன்ற செயல்கள் நடைபெறுவதாக மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வருகிறது. நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளின் கழிவுகள் கொட்டப்பட்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என

மேலும் செய்திகள்