தேக்கடியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
தேக்கடியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
இடுக்கி மாவட்டம் மூணாறில் குளு,குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள தேக்கடி,பருந்து பாறை, வாகமன், குறவன் குறத்தி மலை, ராமக்கல்மேடு போன்ற இடங்களிலும் சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து தேக்கடியில் படகு சவாரி செய்தனர். அப்போது இயற்கை அழகை கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் வாரவிடுமுறையையொட்டி தேக்கடியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.