ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கோடை விடுமுறையை முன்னிட்டு ஏலகிரிமலையில் சுற்்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-05-28 15:05 GMT

சுறறுலா பயணிகள் குவிந்தனர்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்கு படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர்.

இந்த நிலையில்தற்போது கோடை விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமறை என்பதாலும் ஏலகிரி மலையில் சுறறுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கோரிக்கை

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்தினருடன் ஏலகிரிமலைக்கு வந்திருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால்

எனவே ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்திரி நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் விடுதி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்