விடுமுறை தினத்தையொட்டி மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறை தினத்தையொட்டி மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அடிப்படை வசதிகளை ேமம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-05-28 19:15 GMT

திருவட்டார்:

விடுமுறை தினத்தையொட்டி மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அடிப்படை வசதிகளை ேமம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சுற்றுலா தலம்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூரில் ஆசியாவிலேயே மிக உயரமாக தொட்டிப்பாலம் உள்ளது. இது விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக 2 மலைகளுக்கு இடையே கட்டப்பட்டது.

இந்த தொட்டிப்பாலம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். மேலும் பாலத்தின் கீேழ பாயும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

இந்த தொட்டிப்பாலத்தில் நுைழவு கட்டணம், கார் பார்க்கிங் போன்றவை மூலம் அருவிக்கரை ஊராட்சிக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகிறார்கள். போதிய இடவசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

தொட்டிப்பாலத்தின் மேல்பகுதியில் 2 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கழிவறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்றொரு கழிவறை பூட்டியே கிடக்கிறது. செயல்பாட்டில் உள்ள கழிவறையும் சுத்தம், சுகாதாரமின்றி உள்ளது. இந்த கழிவறையில் ஊராட்சி நிர்வாகம் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை மறைத்துவிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாத்தூர் தொட்டிப்பாலத்தை ரூ.3 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்குவதாக அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். நவீன மயமாக்குவதற்கு முன்பாக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையாவது செய்து தர முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்