குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்; நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்
குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. நேற்று வெயில் சற்று அதிகமாக காணப்பட்டது. இடையிடையே சாரல் மழையும் பெய்தது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். அனைத்து அருவிகளிலும் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். ஆண்களை விட பெண்கள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெண்களை நீண்ட வரிசையில் நிறுத்தி போலீசார் குளிக்க வைத்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் இன்னும் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.