கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்:நீண்ட வரிசையில் காத்திருந்து ஆனந்த குளியல்

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-05-13 18:45 GMT

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். மேலும் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர். இதற்கிடையே அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்