கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

Update: 2023-09-03 19:45 GMT

படையெடுத்த சுற்றுலா பயணிகள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி, அதிகாலை முதலே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமான வாகனங்களில் படையெடுத்து வந்தனர்.

நேற்று காலையில் கொடைக்கானலில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதை அனுபவித்த சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் உள்ள பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.

படகு சவாரி

பின்னர் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியைச் சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் சவாரி போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். இருப்பினும் பிற்பகல் முதல் மாலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

மலைப்பகுதியில் அவ்வப்போது மேகமூட்டங்களும் தவழ்ந்து சென்றது. இந்த காட்சி சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளித்தது. பகல் நேரத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்