நகருக்குள் வந்த கடமானை ரசித்த சுற்றுலா பயணிகள்

நகருக்குள் வந்த கடமானை ரசித்த சுற்றுலா பயணிகள்

Update: 2023-05-07 19:45 GMT

வால்பாறை

வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் கடமான்கள் அவ்வப்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தோட்டத்தில் உள்ள பயிர்களை தின்று விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் கடை வீதிக்குள் நேற்று மாலை திடீரென்று ஒரு கடமான் வந்தது. இதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் கடமானுக்கு தின்பண்டங்களை கொடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்