கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-05-28 21:00 GMT

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்வரத்து இருக்கும்.

இந்தநிலையில் தற்போது அருவிக்கு சீராக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதற்கிடையே நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குவிந்தனர். அப்போது அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்