கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-11-06 17:39 GMT

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வாரவிடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதலே பனி மூட்டம், மிதமான வெப்பமும், லேசான சாரல் மழை கலந்து இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த இதமான கால நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தவாறு மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தனர். மேலும் கொடைக்கானல் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு உற்சாகம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்