குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்
குற்றாலம் அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள் என்பதாலும், சனிக்கிழமை என்பதாலும் குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால், போலீசார் அவர்களை நீண்ட வரிசையில் நின்று குளிக்க செய்தனர். மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் இரவிலும் குளிக்க அனுமதி உள்ளதால், நள்ளிரவிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று அதை சரிசெய்தனர்.