ராமநாதபுரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.! 14 பேர் படுகாயம்
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் அருகே கழனிக்குடி என்ற பகுதியில் பயணிகளுடன் சுற்றுலா வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.