முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Update: 2023-06-07 18:59 GMT

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

முதல்-அமைச்சர் இன்று திருச்சி வருகை

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்-அமைச்சர் நாளை மறுநாள் (நாளை) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை (இன்று) இரவு 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளோம்.

தூர்வாரும் பணிகள் ஆய்வு

பின்னர் முதல்-அமைச்சர் தஞ்சைக்கு செல்கிறார். நாளை மறுநாள் (நாளை) காலை தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் தூர்வாரும் பணியை அவர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் பூண்டி பாலம் வழியாக வரும் முதல்-அமைச்சர் கூழையாற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மெயின் ரோட்டில் நந்தியாற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்துவிட்டு திருச்சி திரும்புகிறார். அதன்பிறகு திருச்சியில் இருந்து மதியம் 2.30 மணி அளவில் விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.இவ்வாறு அமைச்சர் ேக.என்.நேரு கூறினார்.

முதல்-அமைச்சர் என்னை திட்டவா?

பேட்டியின்போது, முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணம் தொடர்பாக கவர்னர் விமர்சித்துள்ளது பற்றி அமைச்சர் கே.என்.நேருவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, `நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் எதையாவது சொல்லி, முதல்வர் என்னை கூப்பிட்டு திட்டவா?' என்று கூறி சிரித்துக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்