அரசு பள்ளிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணி
முத்துப்பேட்டை பகுதியில் அரசு பள்ளிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணி நடந்தது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 84 ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலை, நடுநிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று ஒட்டு மொத்த தூய்மை பணி நடந்தது. அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மை பணியை வட்டார கல்வி அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார். இதில் தலைமையாசிரியர் நித்தையன், ஆசிரியர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி அருகில் உள்ள பஸ் நிலையம், பொது இடங்களில் தூய்மை பணி நடந்தது.