தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை; மரம் சாய்ந்தது
தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.
தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் நேற்று காலையில் கடும் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலையில் மேகங்கள் திரண்டு சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து காட்டுப்புத்தூர்-தொட்டியம் செல்லும் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. அப்போது, வாகனங்கள் ஏதேனும் செல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சாலை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.