சிவகாசியில் சாரல் மழை

சிவகாசியில் சாரல் மழை பெய்ததால் ெபாதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2022-11-08 19:21 GMT

சிவகாசி, 

சிவகாசியில் சாரல் மழை பெய்ததால் ெபாதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சாரல் மழை

சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. அதேபோல் மாலை 4 மணிக்கு மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அப்போது வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றன.

சிவகாசியில் கடந்த 1 வாரமாக மழை விட்டு விட்டு, பெய்து வருவதால் இப்பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பட்டாசு உற்பத்தி பாதிப்பு

தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அதேபோல நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் திடீர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதித்துள்ளது.

பெரும்பாலான பட்டாசு ஆலைகள் தற்போது விடுமுறை விடப்பட்டு்ள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்