காரைக்குடி,
காரைக்குடி 5 விளக்கு அருகில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில், மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெற்ற இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறையினை கண்டித்தும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மீண்டும் மணிப்பூரில் இது போன்ற வன்முறை நடக்காமல் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் மீனாள் சேதுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட உதவி செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சிவாஜி காந்தி, அரசு போக்குவரத்துக்கழக மாநில துணை செயலாளர் மணவழகன் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.