கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Update: 2023-02-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராயப்பாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், வடக்கனந்தல், நல்லாத்தூர், குதிரைசந்தல், சடையம்பட்டு, வெங்கட்டாம்பேட்டை, க.மாமானந்தல், க.அலம்பலம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத்தின் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், அரியூர், திருப்பாலபந்தல், மணம்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்