மதுரை மாநாடு தொடர்பாக நாளை தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாநாடு தொடர்பாக நாளை தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-07-27 18:45 GMT

அ.தி.மு.க வீர வரலாறின் பொன்விழா எழுச்சி மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி மதுரையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து கட்சியினர் கலந்து கொள்வது குறித்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, மதுரை மாநாட்டில் பங்கு கொள்வது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடக்கிறது. இதில் ஆலோசனை வழங்க தனி குழுவையே தூத்துக்குடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்கிறார். அந்த குழுவினர் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மதுரை மாநாட்டுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து பஸ், கார், வேன் என 1000 வாகனங்களில் சென்று கலந்து கொள்ள முடிவு செய்து உள்ளோம் என்று கூறினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரா.ஹென்றி, வக்கீல் சுகந்தன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்