நாளை மின் நிறுத்தம்
நன்னிலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
நன்னிலம்;
நன்னிலம் துணை மின் நிலையம் மற்றும் அதிலிருந்து செல்லும் நன்னிலம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நன்னிலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசா கருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்காகோட்டூர், ஆனைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.