திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-20 17:47 GMT

அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டிற்கு பணிபுரிய 1 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். களப்பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவமும், மக்கள் தொடர்பியல் மற்றும் பேச்சு ஆற்றல் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அதே மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெற்று, இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். மீட்கப்பட்ட கொத்தடிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தில் பணி புரிந்தவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் மற்றும் பயணப்படி ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மீட்கப்பட்ட கொத்தடிமையினராகவோ, பழங்குடியினரை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ.3 ஆயிரம் மற்றும் பயணப்படி ரூ.1,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலகம், அரியலூர்-621704 என்ற முகவரிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்