சென்னையில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் , சென்னையில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரி வளாகங்களில் விழுந்த மரங்கள் , மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.