ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை

திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-11 16:14 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கலந்த சில நாட்களாக வெளிசந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களின் நலன் கருதி கூட்டுறவுத்துறையின் சார்பில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருளான தக்காளியை குறைவான விலையில் விற்பனை செய்ய அரசு சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நேற்று திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். இதுபோல் விவர்ஸ் காலனி, ராயபுரம், பாண்டியன்நகர் வடக்கு, நெருப்பெரிச்சல், கருவம்பாளையம், கோபால்நகர், வீரபாண்டி, ஜெய்நகர் பகுதிகளில் முதல்கட்டமாக 10 ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அதிகரிக்கப்படும். ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் சராசரியாக 50 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், துணை பதிவாளர்கள் பழனிச்சாமி, துரைராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்