திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை

தோட்டக்கலைத்துறை சார்பில் திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-07-17 19:15 GMT

திருத்துறைப்பூண்டி, ஜூலை.18-

தோட்டக்கலைத்துறை சார்பில் திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி விலை உயர்வு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் செயல்பட்டு வரும் டான்ஹோடா விற்பனை நிலையத்தில் பொதுமக்களின் நலன் கருதி தக்காளி விற்பனை திருத்துறைப்பூண்டியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்றது.

ரூ.110-க்கு விற்பனை

நேற்று ஆடி அமாவாசை என்பதனால் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே காணப்பட்டது. திருத்துறைப்பூண்டியை சுற்றியுள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140-ல் இருந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை நிலையத்தின் மூலம் ஒரு கிலோ தக்காளிரூ. 110- க்கு விற்பனை நடைபெற்றது.

ரூ.30 குறைவு

இது குறித்து திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் கூறுகையில், இங்கு விற்கப்படும் தக்காளி விலை வெளிச்சந்தையை ஒப்பிடும்போது ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ. 30 குறைவு ஆகும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என கூறினார். நேற்று தக்காளி விற்பனையின் போது திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை அலுவலர் சூரியா, உதவி தோட்டக்கலை அலுவலர் அறிவழகன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் (விற்பனை) சக்திவேல் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்