தக்காளி விலை சற்று குறைந்தது
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்தது. அங்கு கிலோ ரூ.100-க்கு ஏலம் போனது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்தது. அங்கு கிலோ ரூ.100-க்கு ஏலம் போனது.
தக்காளி விற்பனை
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ 108 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் சில்லறை கடைகளில் ஒரு கிலோ 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் திடீரென தக்காளி விலை சற்று குறைந்தது. அங்கு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் சில்லறை கடைகளிலும் தக்காளி விலை குறைந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விலை குறைந்தால்...
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தக்காளி விலை அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை குறைத்து கொண்டதால் விற்பனை அதிகளவில் இல்லை.
இன்று(நேற்று) கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் சில்லறை கடைகளில் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை இன்னும் குறைந்தால் பொதுமக்கள் அதிகளவில் வாங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.