கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 5 டன் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.11 வரை ஏலம் போனது. ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.6-க்கு ஏலம் போனது. இந்த தொடர் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கவலை அடைந்தனர். ஆனால் மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்தது. அதன் விலை விவரம் வருமாறு(கிலோவில்):-
கத்தரிக்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.20, பச்சை மிளகாய் ரூ.50, பீட்ரூட் ரூ.17, வெண்டைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, புடலங்காய் ரூ.15-க்கு விற்பனையானது.