தக்காளி விலை தொடர் வீழ்ச்சி
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
தினசரி காய்கறி சந்தை
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்வேறு கிராமங்களில் தக்காளி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு ஓரளவு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.29-க்கு விற்பனையானது. மேலும் சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.45 வரை விற்பனையானது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தக்காளி சீசன் தொடங்கி உள்ளது. இதனையடுத்து தக்காளி வரத்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் 3 வாரங்களாக தொடர்ந்து தக்காளி விலை வேகமாக வீழ்ச்சி அடைய தொடங்கி உள்ளது.
கிலோ ரூ.20
அதன்படி இன்று கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது. இது கடந்த 3 நாட்களில் ஒரு கிலோவிற்கு ரூ.9 குறைவு ஆகும். தொடர்ந்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை சரிந்துள்ளதால் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.35 என குறைந்துள்ளது.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரிகள் கூறும்போது, தற்போது கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சீசன் தொடங்கி விட்டதால் தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து இருக்ிகறது. இதனால் தக்காளி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது என்றனர்.