விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த தக்களி

விஜயகரிசல்குளம் அகழாய்வில் தக்களி கிடைத்தது.

Update: 2023-07-25 19:44 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட தக்களி முழுமையாக கிடைத்துள்ளது. முதலாம் கட்ட அகழாய்வில் தக்களி முழுமையில்லாமல் கிடைத்தது. தற்போது முழுமையாக கிடைத்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் சாயப்பட்டறை இயங்கி இருக்கலாம். நெசவுத்தொழிலில் பஞ்சில் இருந்து இழைகளை மாற்றுவதற்காக சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களி பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். மேலும் இதுவரை 3,008 பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்