ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம் கூறினார்.

Update: 2023-08-18 19:00 GMT

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம் கூறினார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளச்சந்தை

தமிழக அரசு ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன் பெறும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுப்பாட்டு அறை

எனவே அத்தியாவசிய பொருட்களை கடத்துபவர்கள் பற்றியும், ரேஷன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்.

இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்