கடத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
பொதுவினியோக திட்ட பொருட்கள் கடத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
குடிமைப்பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வு துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது வினியோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு மற்றும் இன்றியைமயா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குனர் வன்னி பெருமாள் உத்தரவின் பேரில், பொது வினியோக திட்டப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 180059955950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது வினியோக திட்டப்பொருட்கள் கடத்தல், பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.