பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2023-01-03 19:51 GMT

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

டோக்கன் வினியோகம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,606 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளன. முழு கரும்பு, தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரியுடன் ரூ.1,000 வழங்க உள்ளதால் அதை பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு திரண்டு வருவார்கள்.

இந்த கூட்ட நெரிசலை தடுப்பதற்காக பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்கி வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகள் மூலமும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி வருகிற 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் வருகிற 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. எனவே டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த தேதியில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுகொள்ளலாம்.

4 நாட்கள்

பொங்கல் பரிசு தொகுப்பை 4 நாட்களில் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகரப்பகுதியில் தினமும் 350 பேருக்கும், ஊரகப்பகுதியில் 250 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்