பழனி அருகே தாளையூத்தில் பகலெல்லாம் உலா வரும் சூரியனை தன் வசீகர பூக்களால் கவர்ந்திழுக்கும் சூரியகாந்தி மலர்கள்.
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் வல்வில் ஓரி மன்னன் வேட்டையாடும் நிகழ்வை சுவர் ஓவியமாக நெடுஞ்சாலை துறையினர் வரைந்துள்ளனர்.
திருப்பதியில் ஸ்ரீ கோதண்டராமாலயத்தில் பவித்ர உற்சவம் நடைபெற்றது.
குளித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர் பாய்ந்து செல்லும் காட்சி
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி மதுரை வந்தது. அதை வரவேற்கும் விதமாக ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மெலட்டூர் அருகே நரியனூர் பகுதியில் வினோத மஞ்சள் நோய் தாக்குதலால் குறுவை பயிர்கள் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதியில் ஒலிம்பியாட் செஸ் போட்டி விளையாட்டு ஜோதியை வரவேற்று 134 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதமாடியபடி சாதனை முயற்சி செய்தனர்.
கூழாங்கல் ஆற்றிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளால் உப்பு மற்றும் கோல பொடியை கொண்டு செஸ் போர்டை வரைந்துள்ளனர்.
அரியலூரில் மழை பெய்ய தொடங்கிய போது குளிர்ச்சியான சூழல் நிலவியது.