மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கொட்டும் மழையில் ஹாக்கி விளையாடிய வீரர்கள்.
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ள விலையில்லா சைக்கிள்கள்.
ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில், 2400 சதுர அடியில் ராட்சத ஒலிம்பியாட் சின்னம் வரையப்பட்டுள்ளது.
சொரிமுத்து அய்யனார் கோயில் முன்பு ஆற்றில் பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.
வடக்குமாங்குடி அருகே சுள்ளான் ஆற்றில் ஏராளமான வெங்காய தாமரை செடிகள் மண்டியுள்ளன.
கன்னியாகுமரியில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.
ராமேசுவரம் கோவிலில் தொடங்கியுள்ள ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 2-வது நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.
புளியஞ்சோலை அய்யாற்றிலிருந்து வரும் நீர், பி.மேட்டூர் பெரிய களுங்கி தடுப்பணையில் வழிந்தோடுகிறது.