பேராவூரணி பகுதியில் இன்று மின்நிறுத்தம்
பேராவூரணி பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
பேராவூரணி;
பேராவூரணி, பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே, பேராவூரணி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பெருமகளுர், திருவத்தேவன், ஆவணம், ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மற்றும் வா.கொள்ளைக்காடு ஆகிய மின்பாதைகள் மற்றும் பேராவூரணி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளுர், ரெட்டவயல், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.