ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 3 ஆண்டு கேட்டரிங் படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் 3 ஆண்டு படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-26 18:45 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சென்னை தரமணியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் நிறுவனம் மூலம் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் அமைந்த ஒரு தன்னாட்சி நிறுவனம். இந்நிறுவனம் சர்வதே அங்கீகாரம் பெற்றது. பிரான்ஸ் நாட்டு தனியார் கல்வி நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

3 ஆண்டுகள்

இந்நிறுவனத்தில் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு பி.எஸ்சி., ஹாஸ்பிட்டாலஜி அண்ட் ஓட்டல் அட்மினிஸ்டிரேஷன் இளங்கலை விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம் குறித்த 3 ஆண்டு முழுநேர பட்டப்படிப்பு, டிப்ளமோ புட் புராடெக்ஷன் 1½ ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பு, மேலும் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு டிப்ளமோ 1½ ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் பட்டய படிப்பும் வழங்கப்படும்.

இந்த படிப்பில் சேர்ந்து படிக்கவும், படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு படிக்க, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியும் தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும். இந்தாண்டு (2023-24) நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 27.4.2023 (இன்று, வியாழக்கிழமை) ஆகும். இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவுசெய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்