சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு இன்றும் விடுமுறை

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜம் புயல் ஆந்திர கடலோர பகுதிக்கு நகர்ந்ததால் மழை ஓய்ந்துள்ளது.

Update: 2023-12-05 01:27 GMT

சென்னை,

'மிக்ஜம்' புயலையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று பொதுவிடுமுறையை அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகள் குளமாகி உள்ளன. பொது போக்குவரத்தும் முடங்கி போய் உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 4 மாவட்டங்களில் உள்ள 'டாஸ்மாக்' கடைகள் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் மூடப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்