மாவட்டத்தில் இன்று4 இடங்களில் மறியல் போராட்டம்

மாவட்டத்தில் இன்று 4 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது.

Update: 2023-09-07 00:55 GMT

ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து ஈரோடு ரெயில் நிலையம் முன்பு, கோபி பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய 4 இடங்களில் மறியல் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் ரகுராமன் கூறுகையில், "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 7 ஆயிரத்து 500 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதில் விவசாய தொழிலாளர் அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் என சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள்", என்றார். இந்த கூட்டத்தில் நகர செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்ட துணைத்தலைவர் பொன் பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்