உஞ்சினி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது: ஆதார், இதர அஞ்சல் சேமிப்பு கணக்குகள் சிறப்பு முகாம்

உஞ்சினி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆதார், இதர அஞ்சல் சேமிப்பு கணக்குகள் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

Update: 2023-06-14 18:30 GMT

அரியலூர் மாவட்டம் உஞ்சினி ஊராட்சி மற்றும் அஞ்சல் துறை இணைந்து மாபெரும் ஆதார் மற்றும் இதர அஞ்சல் சேமிப்பு கணக்குகள் சிறப்பு முகாம் உஞ்சினி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் அஞ்சல் துறையின் பல்வேறு சேமிப்பு கணக்குகள், செல்வமகள் சேமிப்பு கணக்குகள், மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மகளிர் மேன்மை சிறப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஆதார் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், பிறந்த தேதி, முகவரி திருத்தம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலம் முதியோர் ஓய்வூதிய பணம், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனவே உஞ்சினி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்