பள்ளி அருகே புகையிலை விற்றவர் கைது

பள்ளி அருகே புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-04-15 20:29 GMT


மதுரை தத்தனேரி பகுதியில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, தத்தனேரி பகுதியை சேர்ந்த சுல்தான் ரியாஸ் (வயது 35) என்பவர் பள்ளி அருகே புகையிலை விற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்