புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது கழுகேர்கடை கிராமம். இக்கிராமத்தில் உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது முஜ்புர் ரஹ்மான்(வயது 50) தனது பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முஜ்புர் ரஹ்மானை கைது செய்தனர்.