புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-10 19:16 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 53) என்பவர், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் வகையில் வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்