புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Update: 2023-06-07 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் காந்திநகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1,080 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்