புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-21 18:50 GMT

கரூர் நகரப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளரான மோகன்ராஜ்(வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்