புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

போடியில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-14 19:00 GMT

போடி டி.வி.கே.கே. நகர் செல்லகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா (வயது 36). இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது கடை மற்றும் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக 1,320 பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜாவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்