திசையன்விளை:
உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் நேற்று உவரி சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த உவரியைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ (வயது 56) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் அரசால் தடை செய்யப்பட்ட 30 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து உவரியில் உள்ள அவரது கடையை போலீசார் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 44 புகையிலை பாக்கெட்டுக்களையும் பறிமுதல் செய்து, ஜான் பிரிட்டோவை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.