புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
பாவூர்சத்திரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் ஒரு பள்ளிக்கூடம் அருகில் சாலையில் கார் ஒன்றில் வைத்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அங்கு புகையிலை விற்றுக் கொண்டிருந்த பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரம் தென்றல் நகரைச் சேர்ந்த ராஜ் (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.