புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-10 21:55 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில், பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணப்பேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பழையபேட்டையை சேர்ந்த முருகன் (வயது 52) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,790 மதிப்புள்ள சுமார் 1 கிலோ 158 கிராம் எடையுடைய புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்