நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குறிச்சி பகுதியில் பள்ளிக்கூடம் அருகே உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த கடையின் உரிமையாளரான நாசரேத்தை சேர்ந்த நேசகுமார் (வயது 46) என்பவரை கைது செய்தனர். அவர் கடையில் இருந்து சுமார் ரூ.1,700 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.