புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கந்தம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெட்டி கடைக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன்அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து பெட்டிக்கடையில் விற்பனை செய்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த அபுரோஜ்(வயது 55) என்பவரை கைது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.