900 கிலோ புகையிலை பொருட்கள் சரக்கு வாகனத்துடன் பறிமுதல்

நாமக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சரக்கு வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.

Update: 2023-04-20 18:45 GMT

புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் நேற்று சின்னமுதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வாகனத்தை சுற்றிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் வாகனத்தை சோதனை செய்ய முயன்றபோது, டிரைவர் வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். அப்போது அங்கு சென்ற போலீசார், வாகனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 900 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

இது தொடர்பாக சரக்கு வாகனத்தின் டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது40) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்